சமநிலையில் நிறைவுற்றது வடக்கின் போர்! கிருபாகரன் அபார சதம்!!

Saturday, March 12th, 2016
கடந்த மூன்று நாட்களாக யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்த வடக்கின் போர் என வர்ணிக்கப்படும்  யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான 110 ஆவது கிரிக்கெற் தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
முன்னதாக இன்றைய தினம் தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி அணி  கிருபாகரனின் அபார சதத்தின் மூலம் 94 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகங்கொடுத்து அனைத்து இலக்குகளை இழந்து 264 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான மூன்றாம் நாள் போட்டில் நேற்று ஆட்டமிழக்காதிருந்த கிருபாகரனின் இன்றும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி ஆட்டநேரம் முடியும் வரை  63 பந்துப்பரிமாற்றங்களை எதிர்கொண்டு 5 இலக்குகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜெரி பிளமிங் 31 ஓட்டங்களையும், சோமஸ்கரன் மற்றும் நிரோசன் தலா 24 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர் ஜதுசன் மற்றும் கபில்ராஜ் ஆகியோர் முறையே 20 மற்றும் 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றனர்.
பந்துவீச்சில் யாழ் மத்திய கல்லூரி சார்பில் மதுஷன் 2 இலக்குகளையும் அலன்ராஜ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் தலா ஒரு இலக்குகளையும் கைப்பற்றினர்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலாவது இனிங்ஸில் யாழ் மத்திய கல்லூரி அணி 161 ஓட்டங்களையும் சென் ஜோன்ஸ் கல்லூரி 164 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. இதில் யாழ் மத்திய கல்லூரி அணிசார்பாக அணித்தலைவர் அலன்ராஜ் 34 ஓட்டங்களுடனும் பிரியலக்‌ஷன் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கிருபாகரன் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.  பந்துவீச்சில் சென்ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக நிலோஜன் கானமிர்தன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென்ஜோண்ஸ் கல்லூரி அணி 53.3 பந்துப்பரிமாற்றங்களுக்கு முகங்கொடுத்து 164 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்தது. அணிசார்பாக துடுப்பாட்டத்தில் கிசாந்துஜன் 31 ஓட்டங்களுடனும் ஜதுஷன் 28 ஓட்டங்களுடனும், கபில்ராஜ் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர் பந்துவீச்சில் யாழ் மத்தியகல்லூரி சார்பாக முறையே தெஸ்பியன்ராஜ். தசோபன்,  அலன்ராஜ் ஆகியோர் 4,3,2 இலக்குகளை கைப்பற்றினர்
Untitled-7 copy

Related posts: