சச்சின் கொரோனாவையும் அதிரடியாக எதிர்கொண்டு சிக்ஸர் விளாசுவார் – வாசிம் அக்ரம்!

Saturday, April 3rd, 2021

சமீபத்தில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் மூத்த வீரர்களை உள்ளடக்கிய இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள் பங்கேற்றன.விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணி கோப்பையைத் தட்டித் தூக்கியது. அதன்பிறகு, வீரர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பினர்.

இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்வீட் வெளியிட்ட சச்சின், எனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமை படுத்திக்கொண்டேன் எனத் தெரிவித்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று, ஒரு ட்வீட் வெளியிட்டுள்ள சச்சின், “மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது நான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவதற்கு அதிக வாய்ப்புள்ளது. உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

மேலும், இந்திய அணி கடைசியாக உலகக் கோப்பை வென்று இன்றோடு (நேற்று) 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ட்வீடில் இதுகுறித்தும் குறிப்பிட்டார். “நாம் உலகக் கோப்பை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியர்கள் மற்றும் சக வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

இதனையடுத்து, பலர் சச்சின் விரைந்து குணமடைய வேண்டும் எனக் கூறி வாழ்த்துக்களை தெரிவிக்கத் துவங்கினர். பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் வாசிம் அக்ரமும் தற்போது வாழ்த்துகளைத் தெரிவித்து ட்வீட் வெளியிட்டார்.

அக்ரம் ட்வீட்: அதில், “சச்சின் 16 வயது இளம் வீரராக இருந்தபோது, பல முன்னணி பந்துவீச்சாளர்களை தைரியமாக எதிர்கொண்டார். கொரோனாவையும் அதிரடியாக எதிர்கொண்டு சிக்ஸர் விளாசுவார் என உறுதியாகக் கூறுகிறேன். விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்கள். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற தினத்தை மருத்துவர்கள், ஊழியர்களுடன் கொண்டாடினால் நன்றாக இருக்கும். அப்போது புகைப்படம் எடுத்திருந்தால் அதை எனக்கு அனுப்புங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் சச்சின், வாசிம் அக்ரம் இருவருக்கும்

000

Related posts: