கோஹ்லிக்கு ஓய்வு!
Thursday, May 10th, 2018
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அஜிங்கியா ரஹானே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அணித்தலைவராக செயல்பட உள்ளார். அதே போல, அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகள் தொடரிலும் கோஹ்லி விளையாட மாட்டார் என்பதால், அந்த போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா தலைவராக இருந்து அணியை வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வோனர் அதிரடி - வென்றது அவுஸ்திரேலியா!
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 16 நாடுகள் நான்கு குழுக்களில் போட்டியிடும்!
ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடைபெறும் - இந்திய கிரிக்கெட் வாரியம்!
|
|
|


