கோபமடைந்த யுவராஜ் சிங்!
Tuesday, June 7th, 2016
ஒருநாள் மற்றும் 20 ஓவரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக கோஹ்லி தெரிவு செய்யப்படவுள்ளதாக பரவி வரும் வதந்தி குறித்து யுவராஜ் சிங்கிடம் கேட்ட போது, அவர் கோபமடைந்து வெளியேறியுள்ளார்.
கோஹ்லி அறக்கட்டளைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் டோனி, யுவராஜ் சிங் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவளிக்க கோஹ்லி குறித்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார். கோஹ்லி அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட ஸ்மைல் அறக்கட்டளை விருப்பம் தெரிவித்துள்ளது.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவராஜ் சிங்கிடம் கோஹ்லி குறித்து பரவி வரும் வதந்தி குறித்து சொய்தியாளர் கேட்டுள்ளார், அதற்கு தான் இங்கு நிகழ்ச்சியை குறித்தே பேச வந்துள்ளதாகவும், கிரிக்கெட்டை குறித்து இல்லை எனக் கூறி கோபத்துடன் யுவராஜ் சிங் வெளியேறியுள்ளார்.
மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்ட யுவராஜ் சிங்கிடம், செய்தியாளர் குறித்த கேள்வியை கேட்டது தவறு என பலர் விமர்சித்து வருகின்றனர்.
Related posts:
|
|
|


