குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை!
Friday, June 15th, 2018
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவு வரை 2 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக அதன் தலைவர் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக செனன் கெப்ரியல் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
Related posts:
|
|
|


