குத்துச்சண்டை போட்டியின் போது அடி வாங்கி உயிரிழந்த வீரர்!
Thursday, July 25th, 2019
அமெரிக்காவில் நடந்த குத்துச்சண்டை போட்டியின் போது சரமாரியாக அடி வாங்கி மருத்துவமனையில் உயிரிழந்த ரஷ்ய குத்துச்சண்டை வீரரின் மனைவி போட்டுள்ள சபதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மேரிலாந்தின், ஆக்சன் ஹில்லில் உள்ள எம்ஜிஎம் தேசிய துறைமுகத்தில் உள்ள தியேட்டரில் வெள்ளிக்கிழமை நடந்த லைட்-வெல்டர்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் 27 வயதான புவேர்ட்டோ ரிக்கன் வீரர் சுப்ரியல் மத்தியாஸ், 28 வயதான ரஷ்ய வீரர் மாக்சிம் தாதாஷேவ் மோதினர்.
போட்டியின் 11வது சுற்றில் ரிக்கன், தாதாஷேவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதனையடுத்து, தாதாஷேவ் போட்டியிலிருந்து விலகுவதாக பயிற்சியாளர் McGirt அறிவிக்க, ரிக்கன் வெற்றிபெற்றார். பலத்த காயமடைந்த தாதாஷேவ், உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
மாக்சின் தாதாஷேவ் மறைவுக்கு குத்துச்சண்டை வீரர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தாதாஷேவின் மனைவி வெளியிட்ட அறிக்கை அனைவரையும் அதிர வைத்துள்ளது.
Related posts:
|
|
|


