குசால் பெரேரா படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
Tuesday, June 26th, 2018
பந்தைப் பிடிப்பதற்காக வேகமாக ஓடிய போது விளம்பர பலகை மீது மோதி இலங்கை அணி வீரர் குசால் பெரேரா படுகாயமடைந்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்து வருகிறது. இதன்போது இரண்டாவது இன்னிங்ஸில் தில்ரூவான் பெரேரா வீசிய பந்தை, மேற்கிந்திய தீவுகள் வீரர் கேப்ரியல் தூக்கி அடித்தார். எல்லைக் கோட்டை தாண்டி சென்றதால், பீல்டிங் செய்து கொண்டிருந்த குசால் பெரேரா பந்தை பிடிக்க ஓடினார்.
எதிர்பாராதவிதமாக விளம்பர பலகை மீது மோதவே நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வந்த வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர், குசால் பெரேராவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
Related posts:
1996 இல் இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது பற்றி விளக்கும் அர்ஜீன ரணதுங்க!
முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை !
பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு அனுமதி!
|
|
|


