குக்கின் இரட்டைச்சதம்: வலுவான நிலையில் இங்கிலாந்து அணி!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஏஷஷ் தொடரின் 4வது போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி அலெஸ்ரியா குக்கின் இரட்டைச்சதத்தின் உதவியுடன் 9 விக்கட்டுகளை இழந்து 491 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் நான்காம் நாள் தொடரவுள்ளது.
இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அலெஸ்ரியா குக், இன்றைய ஆட்டநேர முடிவில் தனது 5வது டெஸ்ட் இரட்டைச் சதத்தை பூர்த்திசெய்து, ஆட்டமிழக்காமல் 244 ஓட்டங்களை குவித்துள்ளார். 9வது விக்கட்டுக்காக இணைந்து துடுப்பெடுத்தாடிய ஸ்டுவைட் புரோட் 56 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி சார்பில் மேலதிகமாக ஜோ ரூட் 61 ஓட்டங்களையும், கிரிஸ் வோர்க்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய அணிசார்பில் ஹெஷல்வூட், கம்மின்ஸ் மற்றும் நெதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 327 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வோர்னர் 103 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் ஷோர்ன் மார்ஷ் 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இங்கிலாந்து சார்பில் ஸ்டுவைட் புரோட் 4 விக்கட்டுகளையும், ஜேம்ஸ் எண்டர்சன் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் வெற்றி தொல்வியற்ற முடிவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|