கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள்: இலங்கை – பாகிஸ்தான் போட்டியில் அறிமுகம்!

Thursday, September 28th, 2017

ஐசிசி-யின் புதிய விதிமுறைகள் நாளை தொடங்கும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலிருந்து அமலுக்கு வரவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சில புதிய விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அமல்படுத்துகிறது.

அதன்படி, களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர் நடுவரால் இனி வெளியேற்றப்படுவார். ஆட்டம் முழுவதும் அவர் களமிறங்க அனுமதிக்கப்படமாட்டார்.கிரிக்கெட் பேட்களை பொருத்தவரையில், முனையின் தடிமன் 40 மில்லி மீட்டரைத் தாண்டக்கூடாது. அதேபோல பேட்டின் ஒட்டுமொத்த தடிமன் 67 மில்லி மீட்டரை விடவும் அதிகமாக இருக்கக்கூடாது.டி20 போட்டிகளில் டிஆரெஸ் முறை பயன்படுத்தபடும். இம்முறையில், களநடுவர் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டால் ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை இழக்கத் தேவையில்லை அதே போல, டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் ஒரு இன்னிங்ஸூக்கு 2 டிஆர்எஸ் வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும்.

ரன் அவுட் சமயங்களில் பந்து ஸ்டெம்பில் படும்போது துடுப்பாட்ட வீரரின் பேட் கிரிஸூக்குள் தரையைத் தொடும் வகையில் இருக்கவேண்டிய அவசியமில்லை.அதாவது அதற்கு முன்பே அவர் கிரிஸை தொட்டுவிட்டால் அதன் பிறகு பந்து ஸ்டெம்பில் படும்போது அவருடைய பேட் கிரிஸில் படாமல் இருந்தாலும் அவுட் கிடையாது.விக்கெட் கீப்பர், பீல்டர் ஆகியோரின் ஹெல்மெட்டில் பந்து பட்டு கேட்ச் ஆனால் அது அவுட் தான்.பவுண்டரி அருகில் நின்று கேட்ச் செய்யும் போது பீல்டரின் கால், பவுண்டரி எல்லைக்குள் இருந்தால் மட்டும் அவுட்டாக கருதப்படும்.இந்த விதிமுறைகள் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.

Related posts: