கிரிக்கட் நிறுவன தேர்தலுக்கு இடைக்கால தடை – மேன்முறையீட்டு நீதிமன்றம்!
Thursday, May 31st, 2018
இன்று இடம்பெறவிருந்த ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டின், தலைவர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான நிஷாந்த ரணதுங்க தாக்கல் செய்திருந்த மனு இன்றைய தினம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலை நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மேற்கிந்திய தீவுகளை வென்றது இலங்கை !
வெளியேறியது ஜமைக்கா அணி!
விக்ரம் - ராஜன் - சங்கு வெற்றிக் கிண்ணம்
|
|
|


