கிரஹம் போர்ட் பயிற்றுவிப்பாளர் பதவிலிருந்து விலகல்
Sunday, June 25th, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் சர்வதேச போட்டி நிறைவடைந்ததன் பின்னர் அவர் மீண்டும் தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளார். எவ்வாறாயினும் அவரது ஒப்பந்த காலம் 2019 ஆம் ஆண்டு வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து முரண்பாடான நிலைமை காரணமாக அவர் பதவிவிலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
110 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை: இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா!
தடுமாறும் இலங்கை!
இந்திய அணியை பந்தாடிய ட்ரெண்ட் போல்ட் !
|
|
|


