கிண்ணம் வென்றது சென். பற்றிக்ஸ்!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் 16 வயது ஆண்கள் பிரிவில் கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி.
யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் கொற்றாவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதியது. கொற்றாவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணிக்கான முதலாவது கோலை யனுகன் பதிவுசெய்ய முதல் பாதியின் முடிவில் அந்த அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியின் சார்பில் றஜிந்தன் மூன்று கோல்களையும் லியோ ஒரு கோலையும் பதிவுசெய்ய முடிவில் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி.
Related posts:
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முதல் பெண் செயலாளர்!
கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த புதிய ஒப்பந்தம்!
உலக சாதனை படைத்த ரங்கன ஹேரத் !
|
|