கால்பந்து தரவரிசைப் பட்டியல் வெளியானது!

Saturday, December 22nd, 2018

சர்வதேச கால்பந்து சம்மேளமான பிபா வெளியிட்டுள்ள கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலில் பெல்ஜியம் அணி முதலிடம் பிடித்துள்ளது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர், கடந்த ஜூன் 14 முதல் ஜுலை 15ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி, உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், கால்பந்து அணிகளின் தரவரிசைப் பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இதில் 1727 புள்ளிகளைப் பெற்று பெல்ஜியம் அணி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பிரான்சும், 3வது இடத்தை பிரேசிலும் பிடித்துள்ளன.

டாப் 10 அணிகள்

  1. பெல்ஜியம் (1727 புள்ளிகள்)
  2. பிரான்ஸ் (1726 புள்ளிகள்)
  3. பிரேசில் (1676 புள்ளிகள்)
  4. குரோஷியா (1634 புள்ளிகள்)
  5. இங்கிலாந்து (1631 புள்ளிகள்)
  6. போர்த்துகல் (1614 புள்ளிகள்)
  7. உருகுவே (1609 புள்ளிகள்)
  8. சுவிட்சர்லாந்து (1599 புள்ளிகள்)
  9. ஸ்பெயின் (1591 புள்ளிகள்)
  10. டென்மார்க் (1589 புள்ளிகள்)

Related posts: