கால்பந்தாட்ட நட்சத்திரம் மீது கொதி நீரை ஊற்றிய மனைவி!

Saturday, November 12th, 2016

அமெரிக்காவில் கர்ப்பிணி மனைவி ஒருவர் தமது கணவரான பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் தன்மீது கூடுதல் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி அவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பல்கலைக்கழக அளவில் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட நடசத்திரம் Jonnu Smith. இவர் மீதுதான் காதல் மனைவியான மேரி காஸ்பர் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி தனது கோபத்தை காட்டியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் நடந்த இந்த சம்பவத்தில் உடலெங்கும் வெந்து தனது விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு ஸ்மித் தள்ளப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

20 வயதான மேரி காஸ்பர் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். பெரும்பாலான நேரம் தமது காதல் கணவர் விளையாட்டு என்பதையே நினைவில் கொண்டுள்ளதாகவும், தன்னிடம் அதிக அக்கறை காட்ட மறுக்கிறார் எனவும் காஸ்பர் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

சம்பவத்தன்று இதே குறித்து இருவரும் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களின் உறவு குறித்தே பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்மித் தமது படுக்கையில் ஓய்வெடுத்துக்கொண்டுந்த வேளையில் காஸ்பர் கொதிக்கும் வெந்நீரை எடுத்து வந்து ஸ்மித்தின் உடம்பில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் உடல் வெந்த நிலையில் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காஸ்பர் அடுத்த நாளே நிபந்தனையுடன் அவரை விடுவித்துள்ளனர்.

ஸ்மித் மிகவும் திறமையான விளையாட்டு வீரர் என்று கூறப்படுகிறது. எதிர்வரும் சில தொடர்களில் ஸ்மித் தேர்வாளர்களின் பார்வையில் பட்டு தெரிவாகலாம் என்று அவரது நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Related posts: