காலிறுதி வாய்ப்பை இழந்தது வட அயர்லாந்து அணி!

யூரோ கிண்ணம் தொடரில் நொக்-அவுட் சுற்றில் வேல்ஸ் – வட ஐயர்லாந்து அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வட ஐயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. தோல்வியடைந்த வட ஐயர்லாந்து அணி யூரோ தொடலிருந்து வெளியேற்றப்பட்டது.
வேல்ஸ் – வட ஐயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடததால் போட்டியில் 0-0 என்ற சமநிலை ஏற்பட்டது.
இரண்டாவது பாதியின் 75வது நிமிடத்தில் வேல்ஸ் அணி வீரர் அடித்த பந்தை வட ஐயர்லாந்து அணி வீரர் McAuley தடுத்த போது அது சேம் சைடு கோல் ஆனது. இதன் மூலம் வேல்ஸ் அணி 1-0 என முன்நிலை பெற்றது.
கடைசி வரை போராடிய வட ஐயர்லாந்து அணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் வேல்ஸ் அணி 1-0 என வட ஐயர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
Related posts:
வலுவான நிலையில் இந்தியா அணி !
தொடரை வென்று கைப்பற்றியது இலங்கை!
முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி!
|
|