கரப்பந்தில் கிண்ணம்: வென்றது உடுப்பிட்டி மகளிர் !
Saturday, May 26th, 2018
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத் தொடரின் 20 வயது பெண்கள் பிரிவில் உடுப்பிட்டி பெண்கள் அணி கிண்ணம் வென்றது.
வல்வை உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் வவுனியா சிறிசுமணா வித்தியாலயமும் பலப்பரீட்சை நடத்தின.
மூன்று செற்களைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது.
முதலிரு செற்களையும் முறையே 21:11, 21:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற நேர்செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அணி.
மூன்றாமிடத்தை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி தனதாக்கியது.
Related posts:
இலங்கை அணிக்கு இமாலய இலக்கு!
இலங்கை தென்னாபிரிக்கா தொடர் - நான்கு இலக்குகளை வீழ்த்திய விஷ்வா பெர்னாண்டோ!
ஐ.பி.எல் தொடர் - CSK அணியில் விளையாடிய மதீஷ பத்திரன விலகல்!
|
|
|


