கதி கலங்க வைத்த பந்து வீச்சாளர்கள்!

Sunday, August 21st, 2016

கிரிக்கெட்டில் காயங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்று. ஆனால் துடுப்பாட்டக்காரர்களுக்கு ஏற்படும் காயங்கள் பல பந்து வீச்சாளர்களால் ஏற்படுகிறது. அதன் வீடியோ தான் தற்போது சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் என்றால் ஒரு சாதரண விளையாட்டு தான், அதில் என்ன இருக்கிறது, வேகமாக வரும் பந்தை மட்டையை வைத்து தடுத்தால் போதும் அவ்வளவுதான் என கூறுவார்கள்.

ஆனால் உண்மையில் மிகவும் கவனமுடன் விளையாடும் விளையாட்டுக்களில் கிரிக்கெட்டும் ஒன்று. மணிக்கு 140 அல்லது 100 கிலோ மீற்றர் வேகத்தில் வரும் பந்தை சரியாக கவனித்து விளையாடவிட்டால் அவ்வளவுதான்,

மேலும் எதிர்பாராமல் பவுன்ஸ் ஆகி தலை அல்லது இடுப்பின் எதாவது ஒரு பகுதியில் பட்டால் அப்போது தெரியும் கிரிக்கெட் எவ்வளவு மோசமான விளையாட்டு என்று.  அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஹுயூக்ஸ் மற்றும் வங்காள தேசத்தின் ரமன் லம்பா கிரிக்கெட்டில் ஏற்பட்ட மோசமான காயங்களால் தான் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: