கடற்கரை கரப்பந்துத் தொடரில் சாதித்தது கரவெட்டி செயலகம்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவினரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரை மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த யனுசல்யா பிரியவேணி இணையை எதிர்த்து பருத்தித்துறை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த சிந்து, விதுசா இணை மோதியது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய கரவெட்டி பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த சிந்து, விதுசா இணை 21:23, 21:19 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலிரு செற்களையும் கைப்பற்றி 2:0 என்ற நேர்செற் கணக்கில் கிண்ணம் வென்றது.
Related posts:
சிம்பாபே அணி வெற்றி!
தனது சாதனையை மீண்டும் முறியடித்தார் அனித்தா!
காபூலில் பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!
|
|