கங்குலியின் சாதனையை சமன் செய்யப்போகும் கப்டன் கூல்!

நாளையதினம் இடம்பெறவுள்ள இந்திய இலங்கை அணிகளுக்கிடையான இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவராக விளங்கிய கப்டன் கூல் என வர்ணிக்கபடும் மஹேந்திர சிங் டோனி அதிக ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்றிய இந்திய வீரர் என்கின்ற கங்குலியின் சாதனையை சமன் செய்யவுள்ளார்.
மாஸ்டர் பிலாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 463, போட்டிகளிலும், இந்தியாவின் தூண் ராகுல் டிராவிட் 344 ஒருநாள் போட்டிகளிலும்,மொஹம்மட் அசாருதீன் 334 ஒருநாள் போட்டிகளிலும்,சௌரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டிகளிலும், மஹேந்திர சிங் டோனி 310 ஒருநாள் போட்டிகளிலும் இதுவரை பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 307 ஒருநாள் போட்டிகளிலும்,ஆசிய அணி சார்பில் 3 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள டோனி இதுவரை 9891 ஓட்டங்கள் குவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும். 2019ம் ஆண்டிற்கான உலக்கிண்ணம் வரை டோனி இந்திய அணியை பிரதிநித்துவப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
|
|