ஓய்வை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்! 

Saturday, September 7th, 2019


ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான முகமது நபி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, முதன் முறையாக இந்தியாவை எதிர்கொண்டது. அதன் பின்னர் அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது.

தற்போது வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் வீரர் முகமது நபி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

இதனை ஆப்கானிஸ்தான் அணியின் மேலாளர் உறுதிபடுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதாகும் முகமது நபி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இனி கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முகமது நபி 121 ஒருநாள் போட்டிகளில் 2,713 ஓட்டங்களையும், 128 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 67 டி20 போட்டிகளில் 1,131 ஓட்டங்களையும், 69 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகளுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. எனினும், ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அந்த அணி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: