ஓய்வு பெறுகிறார் தல! சோகத்தில் ரசிகர்கள்!

Thursday, July 4th, 2019

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், இந்தியாவிற்கு தனது தலைமையில் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்றுக் கொடுத்த மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2019 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மூத்த பிசிசிஐ அதிகாரி கூறியதாவது, டோனி, உலகக் கோப்பைக்கு பிறகு தொடர்ந்து விளையாட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.டோனியை பற்றி உங்களுக்கு ஒருபோதும் தெரியாது. இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவார் என்பது சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், மூன்று வடிவ கிரிக்கெட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான, டோனியின் முடிவுகள் திடீரென எடுக்கப்பட்டதால், இந்த நேரத்தில் இது உண்மையாக இருக்கமா என்பதை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. டோனியின் ஓய்வு குறித்த தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

37 வயதான டோனி, நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் நடுவரிசையில் களமிறங்கி துடுப்பாடி, 7 போட்டிகளில் 223 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அடித்து ஆடுவது, பந்துக்கு பந்து ஓட்டங்கள் எடுப்பதே டோனியின் இரண்டு சிறப்பம்சமாகும். சமீபத்தில், அவரது இரண்டு சிறப்பம்சங்கள் மீதே பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்திய அணி உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறி உள்ள நிலையில் சூழ்நிலையை கருத்தில் கொண்ட இந்திய அணி நிர்வாகம், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகிறது. எனினும், தற்போது வரை டோனி ஓய்வு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related posts: