ஓய்வு குறித்து ரங்கன ஹேரத் அறிவிப்பு!
Wednesday, July 11th, 2018
எதிர்வரும் நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியுடன் இலங்கையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தான் தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என இலங்கை அணியின் டெஸ்ட் வீரர் ரங்கன ஹேரத் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி எதிர்வரும் புதன்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டிகளின் பின்னர் அணியின் தலைமை மற்றும் நிர்வாகத்துடன் கலந்துரையாடி இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 90 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி சார்பில் விளையாடி இலங்கை அணிக்காக 418 விக்கெட்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
200 ஜி.பி சேமிப்புத்திறன் கொண்ட பென்டிரைவ்!
ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்!
முஷ்பிகுர் ரஹிமின் விக்கெட் காப்பாளர் பணி பறிப்பு!
|
|
|


