ஓய்வினை அறிவித்த இலங்கை வீரருக்கு கிடைக்கும் கெளரவம்!
Tuesday, July 30th, 2019
ஓய்வினை அறிவித்த இலங்கை வீரர் நுவான் குலசேகரவுக்கு வங்கதேசம் – இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியை அர்ப்பணிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகரா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் தனக்கு ஒரு இறுதிப் போட்டி அதாவது பிரியாவிடைப் போட்டியொன்றில் விளையாட அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியை அவருக்கு அர்ப்பணிக்க தீர்மானித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியை பார்வையிடுவதற்கு குலசேகராவுக்கு இலங்கை கிரிக்கெட் அழைப்பு விடுக்கவுள்ளதுடன், அன்றைய தினம் இலங்கை கிரிக்கெட்டுக்கு குலசேகரா ஆற்றிய சேவையை பாராட்டியும் அவரை கௌரவித்து ஒரு பிரியாவிடை நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளது.
குலசேகரா இலங்கை அணிக்காக 184 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்களையும், 58 டி20 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


