ஒலிம்பிக் பதக்கத்தை 25 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் – சுசந்திகா
Saturday, June 10th, 2017
2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெற்றுக்கொண்ட வெள்ளிப்பதக்கத்தை 25 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என முன்னாள் குறூந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பதக்கத்தின் பெறுமதியை முழு உலகமே அறிந்து கொண்டுள்ள போதிலும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இது தெரியவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தப் பதக்கத்திற்கு இவ்வளவு பெறுமதி இருப்பதனை தெரிந்து கொண்டமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.பதக்கத்தை விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சரின் தேர்தல் செலவிற்கும் உதவ முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


