ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு தகுதி!

நியூயோக்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி தொடரில் மகளீர் ஒற்றையர் பிரிவில் இடம்பெற்ற நான்காவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஸ்பெயினை சேர்ந்த கர்லா நவரோவை எதிர்கொண்ட அவர் 6-3, 3-6, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றியை பெற்றுள்ளார்.இதே பிரிவில் நடைபெற்ற பிறிதொரு போட்டியில் ரஷியாவின் ஷரபோவா, லடிவியாவின் அனஸ்டசிஜா செவச்டோவாவை எதிர்த்து விளையாடினார்
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய செவச்டோவா 5-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஷரபோவா தோல்வியடைந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்அதேவேளை, ஆண்கள் இரட்டையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவை சேர்ந்த லியாண்டர் பயஸ் மற்றும் பூரவ் ராஜா ஜோடி ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் மற்றும் அண்ட்ரே ருப்லேவ் ஜோடியை எதிர்கொண்டது
ந்த போட்டியில் ரஷ்ய ஜோடி 6-4, 7-6 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடியை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது
Related posts:
|
|