ஒரே குத்தில் உயிரிழந்த குத்துச் சண்டை வீரர்!

Friday, November 25th, 2016

பிரித்தானியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் 22 வயது குத்துச்சண்டை வீரர் நாக் அவுட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலந்தை சேர்ந்த Kuba Moczyk என்ற வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், இது அவர் பங்கேற்ற முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.Great Yarmouth நடைபெற்ற போட்டியில் Kuba Moczykக்கு எதிராக 17வயது வீரர் களமிறங்கியுள்ளார்.

போட்டியின் கடைசி சுற்றில் Kuba Moczyk நாக் அவுட் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.Kuba Moczyk மூளையில் இரத்தம் வடிவதால் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், Kuba Moczyk சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து ஹெவிவெயிட் சாம்பியன் டைசன் ப்யூரி கூறியதாவது, Kuba Moczyk உயிரிழந்த செய்தி தன்னை அதிர வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். Kuba Moczyk உடலுக்கு குத்தச்சண்டை வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: