ஒருவருக்கும் அணியில் இடமில்லை – அவுஸ்திரேலிய பயிற்சியாளர்!

Thursday, November 17th, 2016

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 4 வீரர்களை தவிர மற்றவர்களின் இடம் உறுதியில்லை என்று அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லீமேன் எச்சரித்துள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத அணியாக விளங்கி வந்த அவுஸ்திரேலிய அணி தற்போது தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 0-3 என முழுமையாக இழந்தது.

தற்போது சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 டெஸ்டில் படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துவிட்டது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று பயிற்சியாளர் லீமேன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடைசி டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மிச்சேல் ஸ்டார்க் மற்றும் ஹாசில்வுட் ஆகியோர் மட்டுமே அணியில் உறுதியாக இடம்பெறுவர்.மற்ற அனைவரும் அணியில் இடம்பெறுவது கடினமே. சிறந்த 11 பேர் கொண்ட அணியை பெற நாங்கள் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

aus1

Related posts: