ஐ.பி.எல். தொடர் – கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி!

Thursday, March 28th, 2019

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.பி.எல். லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது.

இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில், களத்தடுப்பை தெரிவு செய்தது.

தனது 100வது ஐ.பி.எல் போட்டியில் களமிறங்கிய சுனில் நரைன், 9 பந்தில் 3 சிக்சர் 1 பவுண்டரி என அதிரடியாக 24 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் கிறிஸ் லின் (10) நிலைக்கவில்லை.

அடுத்து வந்த ரானா (63) அரைசதம் அடித்து வெளியேறினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா அரைசதம் கடந்தார். தொடர்ந்து வந்த ரசல், ருத்ரதாண்டவமாடினார். இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்கள் எடுத்தது.

இப்போட்டியில் 17 சிக்சர்கள் விளாசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடித்து புது சாதனை படைத்தது.

முன்னதாக அந்த அணி கடந்த 2018ல் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 15 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களான ராகுல் (1), கிறிஸ் கெயில் (20) ஏமாற்றினர்.

தொடர்ந்து வந்த மாயங்க் அகர்வால் (58) அரைசதம் அடித்து அவுட்டானார். பின் வந்த சர்ப்ராஜ் கான் (13) நிலைக்கவில்லை.

கடைசி நேரத்தில் மந்தீப் சிங் (33), மில்லர் (59) எவ்வளவு போராடிய போதும் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து.

இதனால் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது.

Related posts: