இலங்கைவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவராக ஷிகர் தவான் நியமனம்!

Friday, June 11th, 2021

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது.

இந்திய அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதனால் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாததால் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை  இந்திய கிரிக்கெட் பேரவைக்கு ஏற்பட்டது..

இந்த நிலையில் நேற்று (10) இரவு இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு தலைவராக ஷிகர் தவான்  நியமிக்கப்பட்டுள்ளார்.

1. ஷிகர் தவான் (கேப்டன்), 2. புவனேஷ்வர் குமார் (துணைத் தலைவர்), 3. பிரித்வி ஷா, 4. தேவ்தத் படிக்கல், 5. ஆர். கெய்க்வாட், 6. சூர்யகுமார் யாதவ், 7. மணிஷ் பாண்டே, 8. நிதிஷ் ராணா, 9. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 10. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 11. சாஹல், 12. ராகுல் சாஹர், 13. கே. கவுதம், 14. குருணால் பாண்ட்யா, 15 குல்தீப் யாதவ், 16. வருண் சக்ரவர்த்தி, 17. தீபக் சாஹர், 18. நவ்தீப் சைனி, 19. சி. சகாரியா.

வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்கள்: இஷான் பெரேல், சந்தீப் வாரியர் அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங்.

000

Related posts: