ஐ.பி.எல்.தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர்!

Monday, May 23rd, 2016

ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ராய்ப்பூரில் நடைபெற்ற 56-வது லீக் போட்டியில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே பிளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன்படி டெல்லி அணியின் டி கொக், பாண்ட் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினார்கள்.

பாண்ட் 1 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அரவிந்த் பந்தில் ஆட்டமிழந்தார். ஆடுகளம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் மெதுவாக இருந்தது. இதனால் துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஓட்டங்கள் சேர்க்க சிரமப்பட்டனர்.

பெங்களூர் அணி பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள். இந்த கடினமான ஆடுகளத்தில் தொடக்க வீரர் டி கொக்  சிறப்பாக விளையாடி 52 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ஓட்டங்கள் குவித்தார்.

இறுதியில் கிறிஸ் மோரிஸ் 18 பந்தில் 17 ஓட்டங்கள் சேர்க்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பெங்களூர் அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டும், கெய்ல் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விராட் கோஹ்லி, கெய்ல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினார்கள்.

ஆடுகளம் மெதுவாக இருந்ததால் விராட் கோஹ்லி மிகவும் நிதானமாக விளையாடினார். ஆட்டத்தின் 2-வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கெய்ல் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 6 ஓட்டங்களில் ஏமாற்றமளித்தார். பெங்களூர் அணி 2.4 ஓவரில் 17 ஓட்டங்கள் எடுப்பதற்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

அடுத்து கோஹ்லியுடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் கோஹ்லி நிதானமாக விளையாட மறுமுனையில் ராகுல் அதிரடியாக விளையாடினார்.

அவர் 23 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ஓட்டங்கள் குவித்து பிராத்வைட் பந்தில் எதிர்பாராத விதமாக போல்டானார். அப்போது பெங்களூர் அணி 10.1 ஓவரில் 83 ஓட்டங்கள் சேர்த்திருந்தது.

அடுத்து வந்த வாட்சன் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் மேலும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் கோஹ்லி சிறப்பாக விளையாடி அரை சதம் கண்டார்.

அதன்பின் பெங்களூர் அணிக்கு எளிதாகிவிட்டது. கடைசி 3 ஓவரில் 13 ஓட்டங்கள்தான் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ஜாகீர்கான் வீசினார். இந்த ஓவரில் பெங்களூர் அணி 12 ஓட்டங்கள் சேர்த்தது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

இதனால் இரண்டு ஓவரில் 1 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோஹ்லி அந்த ஓட்டத்தை எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறியது. புள்ளிகள் பட்டியலில் 2வது இடம் பெற்றதால் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியுடன் தகுதிச்சுற்று 1ல் 24ம் திகதி மோதுகிறது.

Related posts: