ஐ.பி.எல்: இறுதி போட்டிக்கு முதலாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் தகுதி!
Wednesday, May 8th, 2019
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டிக்கு முதலாவது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது.
நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்க் கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து, தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இன்று இடம்பெறும் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில், வெற்றி பெறும் அணியுடன் சென்னை மோதவுள்ளது.
அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோலூன்றிப் பாய்தலில் மகாஜனாக் கல்லூரி மாணவி புதிய சாதனை!
முன்னாள் அனுபவ வீரர்களின் உதவியை கோரியுள்ள ஹத்துருசிங்க!
போட்டியிலிருந்து விலகிய ஜேம்ஸ் எண்டர்சன் !
|
|
|


