ஐ.பி.எல் ஆட்டங்களில் மாற்றம்!
Tuesday, March 21st, 2017
டில்லி மாநகராட்சித் (எம்சிடி) தேர்தல் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தில்லியில் ஏப்ரல் 22-ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதையொட்டி அங்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக, டெல்லி டேர்டெவில்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் தில்லியில் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது திருத்தப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, டெல்லி டேர்டெவில்ஸ் தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து, மே 6-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாறாக, மும்பை அணி தனது சொந்த மண்ணில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. மும்பை-தில்லி ஆட்டத்தின் மாற்றம் காரணமாக, புணே-ஹைதராபாத் இடையே ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆட்டம், முன்கூட்டியே மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
Related posts:
|
|
|


