ஐசிசி டி20 தரவரிசையில் 4 ஆவது இடத்தில் இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க !
Thursday, September 29th, 2022
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சமீபத்திய டி20 தரவரிசையில் இலங்கை ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க முன்னேறியுள்ளார்.
டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி 246 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 243 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 211 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில், இலங்கையின் வனிந்து ஹசரங்க 692 ரேட்டிங் புள்ளிகளுடன் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 737 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி 716 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் அடில் ரஷித் 698 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 696 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 861 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 801 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
000
Related posts:
|
|
|


