எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை – கோஹ்லி!

Friday, June 9th, 2017

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை என அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடக்கப் போட்டியில் உலகின் முதற்தர சுழற்பந்து வீரரான அஸ்வின் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இப்போட்டியில் அஸ்வினுக்கு பதிலாக சகலதுறைவீரர் ஹர்த்திக் பாண்ட்யா இடம்பெற்றிருந்தார். அஸ்வினை விட ஜடேஜா மேலானவர் என்ற அடிப்படையில் ஜடேஜா சேர்க்கப்பட்டு அஸ்வின் நீக்கப்பட்டார். அத்தோடு இலங்கை அணிக்கெதிரான போட்டியில் அஸ்வின் விளையாடுவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோனியின் தலைமைத்துவத்தின் கீழ் கொடிகட்டி பறந்த அஸ்வின், கடந்த காலங்களில் அதாவது விராட் கோஹ்லி அணியை வழிநடத்த தொடங்கியதன் பின்னர், அவருக்கு அணியில் முக்கியத்துவம் கொடுப்பது வெகுவாக குறைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், “அஸ்வின் உலகின் முன்னணி சுழற்பந்து வீரர். ஒவ்வொருவருக்கும் அவரை பற்றி நன்றாக தெரியும். தொழில் ரீதியிலான வீரர்களில் அவர் சிறந்தவர். கடந்த போட்டியில் நீக்கப்பட்ட அவர் அணி நிர்வாகத்தின் முடிவை புரிந்து கொள்வார். இதனால் அவர் எந்த கருத்து வேறுபாட்டுடனும் இல்லை.

அணித் தேர்வு தொடர்பாக நீங்கள் விரும்பிய முடிவை எடுக்க உங்களுக்கு ஆதரவளிப்பேன் என்று அஸ்வின் என்னிடம் தெரிவித்திருந்தார். மொஹமட் ஷமி ஒருநாள் போட்டியில் விளையாடி நீண்ட நாட்கள் ஆகின்றன. அவரும் அணியின் சொத்தாக நிச்சயமாக இருப்பார். ஹர்த்திக் பாண்ட்யா உண்மையிலேயே இந்திய அணியின் சொத்தாக இருக்கிறார். துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் முத்திரை பதிக்கிறார். நாங்கள் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கவில்லை. எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஒரே மாதிரியாகவே விளையாடுவோம்” என கூறினார்

Related posts: