எதிர்வரும் 27ஆம் திகதி  கொழும்பில் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி!

Monday, May 21st, 2018

இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அபிவிருத்தி குழாம் அணியும் இங்கிலாந்தின் விளையாட்டுக் கழகமும் சிங்கப்பூரின் தேசிய வலைப்பந்தாட்ட அணியும் இதில் பங்கேற்கவுள்ளன.

எதிர்வரும் செப்டெம்பர் மாத் சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் ஷிப் போட்;டியில் பங்கேற்கும் இலங்கை அதற்கான ஒத்திகைப் போட்டியாக இதனை ஒழுங்கு செய்துள்ளது

Related posts: