உலக பெட்மிண்டன் தரவரிசையில் சய்னா நேவால் முன்னேற்றம்!

உலக பெட்மிண்டன் தரவரிசை பட்டியலை சர்வதேச பெட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய இந்திய வீராங்கனை சய்னா நேவால் இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் மகளீர் ஒற்றையர் பிரிவில் அவர் தங்க பதக்கம் வென்றார்.
இதேவேளை, பிறிதொரு இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
Related posts:
|
|