உலக பாதுகாப்பு சபையின் கோல்ப் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் !
Tuesday, November 14th, 2017
11 வது உலக பாதுகாப்பு சபையின் கோல்ப் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் திருகோணமலை சீனக்குடா ஈகிள் கோல்ப் லிங்க் விளையாட்டு மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அட்மிரல் ரவீந்த்திர விஜே குணவர்த்தன தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், முப்படைத் தளபதிகள், பல நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைவீரர்கள் பங்கேற்றனர்.நான்கு வருடங்களுக்கு ஒருமுறை குறித்த கழகத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்விளையாட்டுப் போட்டிகளில் 1947ம் ஆண்டு முதல் இலங்கை உறுப்புரிமை பெற்றுள்ளது.அத்துடன், குறித்த கழகத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் முதலாவது போட்டி இதுவாகும்.
குறித்த போட்டிகளில் பஹறேன், கனடா, எஸ்டோனியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஸ்பெயின், உகாண்டா, அமெரிக்கா, சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.குறித்த போட்டிகள் நாளை 12ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


