உலக சாதனை படைத்த கெய்ல்!

Thursday, March 17th, 2016

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

உலகக் கிண்ண டி20 போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி 6 இலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 5 பவுண்டரி, 11 சிக்ஸர் உட்பட 100 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

கிறிஸ் கெய்ல் 5–வது சிக்சர் அடித்த போது, 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 92 ஆக(46 ஆட்டம்) உயர்ந்தது.

இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் நொறுக்கியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து முன்னாள் அணித்தலைவர் பிரண்டன் மெக்கல்லத்தின் சாதனையை(71 ஆட்டத்தில் 91 சிக்சர்) முறியடித்தார்.

Related posts: