உலக கிண்ண தொடர்: வெறுங்கையுடன் திரும்பும் மெஸ்சி!

பிரான்ஸ் அணிக்கு எதிரான ‘ரவுண்டு–16’ சுற்றுப்போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் 2006 10 14 மற்றும் தற்போது என உலக கோப்பை தொடரிலிருந்து வெறுங்கையுடன் திரும்பியது. கேப்டன் மெஸ்சி சோகத்தில் உறைந்தார்.
அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பை வென்ற பிறகு ஏதாவது ஒரு ஐரோப்பிய அணியிடம் தோற்று வெளியேறிய இந்த அணி இம்முறை பிரான்சிடம் வீழ்ந்தது.
கடந்த 2014 உலக கோப்பை தொடரில் சிலி அணி பயிற்சியாளராக இருந்தார் ஜார்ஜ் சம்பாவோலி. ‘ரவுண்டு–16’ சுற்றில் இந்த அணி பிரேசிலிடம் ‘பெனால்டியில்’ தோற்றது. இம்முறை ஜார்ஜ் பயிற்சியில் களமிறங்கிய அர்ஜென்டினா ‘ரவுண்டு–16’ போட்டியில் பிரான்சிடம் தோற்றது.
கடந்த 1986 முதல் ‘ரவுண்டு–16’ சுற்று அறிமுகம் ஆனது. அன்று முதல் பிரான்ஸ் அணி கடைசியாக பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் ‘நாக் அவுட்’ (1986 1998 2006 2014 2018) போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது.
இரு அணிகள் மோதிய 12 போட்டிகளில் அர்ஜென்டினா 6 பிரான்ஸ் 2ல் வெல்ல 4 போட்டி ‘டிரா’ ஆனது. நேற்று சாதித்த பிரான்ஸ் அணி 3வது வெற்றியை பதிவு செய்தது. அர்ஜென்டினா அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் முதல் வெற்றி பெற்றது. இதற்கு முன் 1930 1950ல் தோற்று இருந்தது.
ரஷ்ய உலக கோப்பை தொடரில் லீக் சுற்றில் இருந்த நீல நிற ‘டெல்ஸ்டார்’ பந்து பயன்படுத்தினர். ‘நாக் அவுட்’ சுற்று ஒவ்வொரு அணிகளுக்கும் கடைசி வாய்ப்பு என்பதால் இதில் சாதிக்க வேண்டும் என்ற பொருள்படும் வகையில் சிவப்பு நிற ‘டெச்டா’ பந்து பயன்படுத்தப்படுகிறது. ரஷ்ய மொழியில் இதற்கு கனவு லட்சியம் விருப்பம் என அர்த்தம்.
Related posts:
|
|