அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 07 வயது சிறுவன் தலைமை!

Tuesday, December 25th, 2018

இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் “பாக்சிங் டே” டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் இணைத் தலைவராக அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 07 வயது சிறுவன் உள்ளான்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 07 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர் அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவன் உடல்நிலை காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளான்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தலைவராக வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என தனது தந்தையிடம் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.

அதன்படி நாளை மெல்போர்னில் நடைபெற இருக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் சிறுவன் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டுள்ளான். மெல்போர்னில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணி தலைவர் டிம் பெய்ன் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோருடன் ஆர்ச்சி சில்லர் கலந்து கொண்டான். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சி சில்லர் ஆஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக இருப்பார்.

image_24c157d349

Related posts: