உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இந்தியா எட்டு இலக்குகளால் வெற்றி!

Thursday, June 6th, 2024

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: