உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – அயர்லாந்து அணிக்கு எதிராக பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி !
Saturday, June 1st, 2024
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (31) இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரசியல் விளம்பரங்களை தடை செய்கிறது டுவிட்டர்!
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பிரதமரினால் திறந்து வைப்பு!
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு - எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை குறையுங்கள் - நாடாளும...
|
|
|


