உலகக் கிண்ணம் – மீண்டும் சம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து!
Monday, July 22nd, 2019
உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி சம்பியனாகியுள்ளது.
லிவர்பூலில் நேற்று இடம்பெற்ற வலைப்பந்தாட்ட இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி, அவுஸ்திரேலியாவை 52 : 51 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன்படி 11 வருடங்களாக சம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா அணியை நியூசிலாந்து அணி தோற்கடித்துள்ளது.
அத்துடன் 16 வருடங்களின் பின்னர் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் இடம்பெற்றிருந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியை வென்று இங்கிலாந்து மூன்றாம் இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் ஆரம்பம்!
U.S. ஓபன் டென்னிஸ் போட்டியில் இசிகர்களுக்கு அனுமதி இல்லை!
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலியா!
|
|
|


