உலகக் கிண்ணத் தொடர் – இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனா – பிரான்ஸ் மோதல்!
Thursday, December 15th, 2022
2022 பீஃபா உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பலம் வாய்ந்த பிரான்ஸ், இவ்வருட உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவுடன் போட்டியிடத் தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரான்ஸ் அணிக்காக தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோலை அடித்தார், ஆட்டத்தின் 5 ஆவது நிமிடத்தில் அவர் அந்த கோலை அடித்தார்.
ஆட்டத்தின் முதல் பாதி முடியும் வரை கால்பந்து மைதானம் சூடுபிடித்த போதிலும், இரு அணிகளும் கோல் எதனையும் பெறவில்லை. அதன்படி, ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில், பிரான்ஸ் மற்றொரு கோலை பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (18) பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை ஆர்ஜென்டினா 6 ஆவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் பிரான்ஸ் 4 ஆவது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


