உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான சிறந்த அணியை உருவாக்குவேன் – அசங்க குரு­சிங்க!

Tuesday, March 7th, 2017

20 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் மீண்டும் இலங்கை அணிக்கு பங்­க­ளிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தமையையிட்டு பெரு­மை­ யடை­வ­தாக 1996 உல­கக்­கிண்­ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் அசங்க குரு­சிங்க தெரி­வித்துள்ளார்.

இலங்­கைக்கு 1996 உல­கக்­ கிண்­ணத்தைப் பெற்­றுத்­த­ரு­வதில் 3ஆம் இலக்க வீர­ராகக் கள­மி­றங்கி அதி­ரடி துடுப்­பாட்­டத்தை வெளிப்­ப­டுத்தி எதி­ர­ணியை அதி­ர­வைத்து தனக்­கென்ற தனி­யொரு முத்­திரை பதித்த இலங்கை அணியின் முன்னாள் ஆட்­டக்­காரர் அசங்க குரு­சிங்க 20 வரு­டங்­க­ளுக்குப் பிறகு மீண்டும் இலங்கை கிரிக்­கெட்டின் வளர்ச்­சிக்­காகப் பணி­யாற்­ற­வுள்ளார்.

இதன்­படி, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகா­மை­யா­ள­ராக அசங்க குரு­சிங்­கவை இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் நிய­மித்­துள்­ளது. தனது பத­வி­யினைப் பொறுப்­பேற்க நேற்­று­காலை நாடு திரும்­பிய அசங்க குரு­சிங்கஇவிசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பிலும் கலந்­து­கொண்டார். இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும், எனது பாட­சாலை நண்­ப­ரு­மான அர­விந்த டி சில்­வா­வுடன் நான் பாட­சாலை கிரிக்­கெட்டில் அறி­மு­க­மானேன்.

அதன்­ பி­றகு இளம் வயதில் தேசிய அணியில் இடம்­பி­டித்தேன்.உண்­மையில் 1996 உல­கக்­கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக லாகூர் கடாபி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற போட்­டியில் அரைச்­சதம் குவித்­த­துடன் ஆட்­ட­நா­யகன் அர­விந்த சில்­வா­வுடன் மூன்­றா­வது விக்­கெட்டில் இணைந்து துடுப்­பெ­டுத்­தாடி இலங்கை அணி சம்­பி­ய­னா­வ­தற்கு வழி­வ­குத்­தி­ருந்­தமை இன்­றைக்கும் என்னை பிர­மிக்க வைத்­துள்­ளது.

இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால என்னை கடந்த 5 மாதங்­க­ளுக்கு முன் அவுஸ்­தி­ரே­லி­யாவில் சந்­தித்­த­போது இப்­ப­த­வியை ஏற்­கு­மாறு அழைப்­பு­வி­டுத்­தி­ருந்தார். எனவே இன்று நான் அவ­ரு­டைய அழைப்பை ஏற்று மீண்டும் இலங்­கைக்கு வருகை தந்­துள்ளேன்.

குறிப்­பாக முற்­றிலும் இளம் வீரர்­களைக் கொண்ட இலங்கை அணியை சிறப்­ பான முறையில் கட்­டி­யெ­ழுப்பி 2019 உல­கக்­கிண்­ணத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான சிறந்த அணி­யொன்றை உரு­வாக்­கு­வதே எனது இலக்­காகும் என குரு­சிங்க தெரி­வித்தார்.இலங்கை அணிக்­காக 41 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி 7 சதங்களுடன் 2452 ஓட்டங்களைக் குவித்துள்ள அசங்க, 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி யுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: