உலகக்கிண்ண தொடர் – புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாம் இடம்!
Wednesday, June 19th, 2019
ஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய வெற்றியை அடுத்து, உலகக்கிண்ண லீக் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாம் இடத்தை அடைந்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 397 ஓட்டங்களைப்பெற்றது.
இயன்மோகன் 148 ஓட்டங்களை 71 பந்துகளில் பெற்றுக் கொடுத்தார்.
பதிலளித்து துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி கண்டது.
இதன்மூலம் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து நான்கு வெற்றிகளுடன் மொத்தமாக 8 புள்ளிகளைப்பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தலா 7 புள்ளிகளுடன் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன.
பங்களாதேஸ் 5 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், இலங்கை 4 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும் இருக்கின்றன.
மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளைப் பெற்று ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் இடங்களில் உள்ளன.
ஆப்கானிஸ்தான் புள்ளிகள் எதனையும் பெறவில்லை.
Related posts:
|
|
|


