உசைன் போல்ட்டுக்குக் கொரோனா?
Tuesday, August 25th, 2020
34 வயதான அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோப் பதிவில், ‘எல்லோரையும் போல நானும் காலையில் எழுந்தேன். சமூக வலைத்தளங்களை பார்த்த போது எனக்கு ‘கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனக்கு அறிகுறியற்ற கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். அதனால் ‘ தற்போது நான் சுய தனிமைப்படுத்தலிலுள்ளேன். மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருக்கின்றேன்” இவ்வாறு அவர் தெரிவத்துள்ளார்.
உலகின் அதிவேக மனிதராகக் கருதப்படுபவர் தடகள வீரர் உசைன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் ஒலிம்பிக்கில் இதுவரை 8 தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டு உலக சம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பின்னர் தனது ஓய்வினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தான் தொடர்பான தெளிவான செய்தி வெளிப்படும் - மியன்டட்!
ஆயுதங்கள் விற்பனைக்கு தடை – பிரதமர் அதிரடி!
பிலிப்பைன்ஸின் லெய்ட் பகுதியில் நில அதிர்வு - ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்!
|
|
|


