உசேன் போல்டுக்கு முதல் வெற்றி!
Tuesday, May 17th, 2016
உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான ஜமைக்காவின் உசேன் போல்ட், கேமான் “இன்வைட்டேஷனல்’ போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து 2016 ஆம் ஆண்டை வெற்றியோடு தொடங்கியுள்ளார்.
கரீபியத் தீவுகளில் ஒன்றான கேமான் தீவில் சனிக் கிழமை நடைபெற்ற கேமான் “இன்வைட்டேஷனல்’ தடக ளப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் பங்கேற்ற உசேன் போல்ட் 10.05 விநாடிகளில் இலக்கை எட்டினார். அவருக்குஅடுத்தபடியாக அமெரிக்காவின் டென்டாரியஸ் லாக் 2-ஆவது இடத்தைப் பிடித்தார். அவர் இலக்கை எட்டுவதற்கு போல்ட்டைவிட கூடுதலாக 7 மைக்ரோ விநாடிகள் எடுத்துக்கொண்டார். மற்றொரு ஜமைக்கா வீரரான கெமர் பெய்லி கோல் 3-ஆவது இடத்தைப் (10.18 விநாடி) பிடித்தார்.
இது எனது சிறந்த ஓட்டம் அல்ல. எனினும் காயம் எதுவுமின்றி இலக்கை எட்டியிருப்பது முக்கியமானதாகும் என்று வெற்றி குறித்து உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


