இலங்கை வீரர் ரொஷான் சில்வாவும் சதமடித்தார்!
Saturday, February 3rd, 2018
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும்இலங்கை அணி வீரர் ரொஷான் சில்வா சற்றுமுன்னர் சதம் அடித்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகின்றது. இதில் இலங்கை அணி சற்று முன்னர்வரை 03 விக்கட் இழப்புக்கு 533 ஓட்டங்களைப் பெற்று 20 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியில் முன்னதாக இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா தனது 04வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்திருந்ததுடன் குசல் மெண்டிஸும்04வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்திருந்தார்.
பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தேர்வாளர் பதவியை நீடிக்கவிரும்பவில்லை - மார்க் வோ!
தர வரிசையில் முன்னிலை வகிக்கும் இலங்கை வீரர்கள்!
விளையாட்டின் மகிமையை உலகுக்கு மீட்டிக்காட்டியது டோக்கியோ ஒலிம்பிக்!
|
|
|


