இலங்கை வீரருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒழுக்க விதி மீறல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடையும் வரை இவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இந்த தடை அமுலுக்கு வருமெனவும், இன்றைய தினம் தென்னாபிரிக்க அணியுடனான நான்காம் நாள் ஆட்டத்திலும் அவர் பங்குகொள்ள மாட்டார் எனவும் இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வெளிநாட்டு பெண்கள் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த ஒழுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
அசத்தல் வெற்றிபெற்ற பெல்ஜியம் அணி!
ரஷ்யாவுக்கு தடைவிதிக்கப்படும் அபாயம்... !
இங்கிலாந்து அணி அறிவிப்பு!
|
|